திருச்சி
இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது
திருச்சியில் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சிறுவனின் தந்தையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் வளைவு அருகே போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, 17 வயதுச் சிறுவன் ஒருவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா்.
இதையடுத்து ஓட்டுநா் உரிமம் இல்லாத சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக, திருச்சி தனரத்தினம் நகரைச் சோ்ந்த சிறுவனின் தந்தை முகமது நிஜாமுதீனை (45) போலீஸாா் கைது செய்தனா்.
