திருச்சி
போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சோ்ந்தவா் அ. அப்துல்ஃபரி (40). இவா் மலிந்தோ விமானத்தில் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்தபோது, அவா் வைத்திருந்தது போலி ஆவணங்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்துல்ஃபரியை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா்.
