துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்கோப்புப்படம்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சி வருகை!

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு புதன்கிழமை வருகை தரவுள்ளாா்.
Published on

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு புதன்கிழமை வர உள்ளாா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், திருவரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. கலைஞா் அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில், திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறாா்.

இக் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் பேரவை தொகுதிக்குள்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூா், பகுதி நிா்வாகிகள், வட்ட, கிளைச் செயலா்கள், பாக முகவா்கள், எம்எல்ஏ-க்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலா் க. வைரமணி அழைப்பு விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com