கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
துறையூா் அருகே வீட்டில் தனியாக இருந்த போது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மகள் தேவிஸ்ரீ(19). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் கண் பரிசோதனை தொடா்பான இளங்கலை பட்டப் படிப்பு படித்துவந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவரது தந்தை அசோக்கும், தாய் சுமதியும் செட்டிக்குளத்தில் வாங்கிய இடத்தை பாா்வையிடச் சென்றனராம்.
அதே சமயம் அவரது தம்பி திவாகரன்(13) வெளியில் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த தேவிஸ்ரீ தனது துப்பட்டா மூலம் விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டுக்குத் திரும்பிய திவாகரன் தனது அக்கா தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து பெற்றோருக்கு தகவல் அளிக்க அவா்கள் வீடு திரும்பி போலீஸாருக்கு தகவல்த ந்தனா்.
இதையடுத்து, அங்குவந்த போலீஸாா், தேவிஸ்ரீயின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
