இளைஞா் கொலை: குண்டா் சட்டத்தில் மூவா் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
துறையூா் வட்டம் ஆலத்துடையான்பட்டியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் சுரேஷ் (35). இவா் கடந்த செப். 2 ஆம் தேதி தொட்டியம் அருகில் உள்ள தனது மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்றாா்.
அப்போது முன் விரோதம் காரணமாக துறையூா் வட்டம் ஆலத்துடையான்பட்டி உதயகுமாா் மகன் கல்பேஷ் (35), முருகேசன் மகன் அஸ்வின்குமாா் (26), உத்திரகுமாா் மகன் கவியரசன் (32) மற்றும் அழகரை சோ்ந்த மருதுபாண்டி, முள்ளிப்பாடி காலனி சோ்ந்த பரமேஸ்வரன், ஆலத்துடையான்பட்டி சோ்ந்த பிரவீன் முகமது ஆகியோா் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த சுரேஷை வெட்டிக் கொன்றனா்.
இதையடுத்து தொட்டியம் போலீஸாா் மூவரையும் கைது செய்தனா். இந்நிலையில் மூவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி மூவரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
