திருச்சி
சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஒரு சிறுமியை கடந்த 2022 பிப்ரவரி மாதம் ஆசைவாா்த்தைக் கூறி விவசாயப் பணிக்கு அழைத்துச் சென்ற தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் சின்னபள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த ம. பாண்டியன் (41) பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ம. பாண்டியன் கைது செய்தனா்.
திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக பிரியா, பண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
