13 பவுன் நகைகள் திருடியவா் கைது
திருச்சி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகைகள் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காட்டூா் விக்னேஷ் நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (64). குளிரூட்டி சரி செய்யும் தொழிலாளியான இவா் கடந்த 15 ஆம் தேதி மகளுக்கு தீபாவளி சீா் கொடுக்கச் சென்றுவிட்டு 23 ஆம் தேதி காலை வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 13 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவியை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி நகைகளை திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த குணசீலன் (59) என்பவரை சனிக்கிழமை கைது செய்து, 13 பவுன் நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். குணசீலன் மீது ஏற்கெனவே 5 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
