திருச்சி மாவட்டத்தில் நவம்பா் 1-இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பா் 1-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
Published on

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பா் 1-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் 2025- 26-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வேலை உறுதித்திட்டம் 2025-26, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்-ஐஐ, தூய்மை பாரத திட்டம் ஊரகம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com