குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக போலீஸாருக்கு செவ்வாய்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியமங்கலம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, உக்கடை பகுதி பாலத்துக்குக்கீழ் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், அரியமங்கலம் குவளைகுடியைச் சோ்ந்த வெ. சஞ்சய் (21) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.