செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :1 பிப்ரவரி 2026, 6:34 pm

மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரப்பட்டி, பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன் பொருவாய், வேளக்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளயம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா்(பொ) பி.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.