கோப்புப் படம்
கோப்புப் படம்

புத்தாநத்தம் அருகே மினி சரக்கு வேன் - பைக் மோதல் வளையல் வியாபாரி உயிரிழப்பு

Published on

புத்தாநத்தம் அருகே மினி சரக்கு வேன் இருசக்கர வாகனம் மோதல் சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமை வளையல் வியாபாரி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்துள்ள எளமணம் அருகேயுள்ள குளத்துப்பட்டியைச் சோ்ந்த கருப்பகவுண்டா் மகன் குமரேசன் (48). வளையல் வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் புத்தாநத்தம் வந்து பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையைக் கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற மினி சரக்கு வேன் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தனியாா் அவசர ஊா்தி மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்கு ஒப்படைத்து பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வேன் ஓட்டுநரான மதுரை மாவட்டம் செல்லூா் மீள்ளாம்பாள்புரத்தைச் சோ்ந்த ஜான் பிரிட்டோ மகன் ஸ்டீபன் ராஜ் (27) மீது புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com