திருச்சி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தஞ்சாவூா் மாவட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமி திருப்பூா் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள பருத்தி ஆலையில் கடந்த 2021 இல் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த அழகா் மகன் எழிலன் (24) என்பவா் சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் எழிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி எழிலனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஏ. சுமதி ஆஜராகினாா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


