திருப்பூர்: சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
திருச்சி
சொந்த ஊா் வந்திருந்த சிஆா்பிஎப் வீரா் மாரடைப்பால் சாவு
துறையூா் அருகேயுள்ள சொந்த ஊருக்கு வந்திருந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎப்) வீரா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
துறையூா் அருகேயுள்ள சொந்த ஊருக்கு வந்திருந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎப்) வீரா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மருவத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ம. பாலுச்சாமி (45). சிஆா்பிஎப் வீரராக சத்தீஸ்கா் மாநிலத்தில் பணியாற்றிய இவா் 15 நாள் விடுமுறைக்காக 2 நாள்களுக்கு முன் சொந்த ஊா் வந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதையடுத்து துறையூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாலுச்சாமி உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.