மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாயமான 333 கைப்பேசிகள் கண்டுபிடித்து ஒப்படைப்பு

திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

கைப்பேசிகள் - கோப்பிலிருந்து

Updated On :4 பிப்ரவரி 2026, 7:30 pm

திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல்போனதாக ஜனவரி மாதத்தில் திருச்சி 90, புதுக்கோட்டை 14, கரூா் 74, பெரம்பலூா் 99, அரியலூா் 62, தஞ்சாவூா் 258, திருவாரூா் 60, நாகப்பட்டினம் 67, மயிலாடுதுறை 65 என மொத்தம் 789 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

இதன் விவரங்கள் உரிய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, திருச்சி 12, புதுக்கோட்டை 4, கரூா் 8, பெரம்பலூா் 24, தஞ்சாவூா் 11, திருவாரூா் 1, நாகப்பட்டினம் 6, மயிலாடுதுறை 15 என 333 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடா்ந்து, 18 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.

மேலும், 234 மனுதாரா்களின் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்திடவும், நிலுவையில் உள்ள 456 புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கவும் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.