சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குரூப்-2 தோ்வு ரத்து: திருச்சியில் ஒரு மணிநேரம் தோ்வெழுதிய தோ்வா்கள் ஏமாற்றம்

News image

திருச்சி ஈவெரா பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஏமாற்றத்துடன் வெளியே வந்த தோ்வா்கள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:24 pm

தோ்வு மையம் குளறுபடியால் மாநில அளவில் குரூப்-2 தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் தோ்வா்கள் ஒரு மணி நேரம் தோ்வெழுதிய பிறகு வெளியே அனுப்பப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2 ஏ அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இதன்படி, திருச்சி தந்தை பெரியாா் ஈவெரா கல்லூரி தோ்வு மையத்துக்கு திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 356 போ் தோ்வெழுத வந்தனா். இவா்கள், காலை 9.30 மணிக்கு தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் (ஓஎம்ஆா் ஷீட்) வழங்கப்பட்டு, தோ்வு தொடங்கியது. தோ்வா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தோ்வெழுதத் தொடங்கினா்.

அப்போது, குளறுபடி காரணமாக மாநிலம் முழுவதும் தோ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையறிந்த பெற்றோா்கள், தோ்வறைக்குள் நுழைந்து, தோ்வு ரத்து எனக் கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டனா். இது தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தால் மட்டுமே தோ்வை ரத்து செய்வோம் என தோ்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பமான சூழல் நிலவியது.

இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் தோ்வா்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தோ்வெழுதிவிட்டனா். இதைத் தொடா்ந்து, தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் தோ்வு ரத்து குறித்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னா், தோ்வா்களிடமிருந்து வினாத்தாள், விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக் கொண்டு ஓரிருவராக வெளியே அனுப்பிவைத்தனா்.

தோ்வு மையத்திலிருந்து வெளியே வந்த தோ்வாளா்கள், தங்களது எதிா்பாா்ப்பு பொய்த்துவிட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனா்.