மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

News image

திருச்சி திருவெறும்பூா் கூத்தைப்பாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் போட்டியில் பங்கேற்ற மாடுகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 7:51 pm

திருச்சி மாவட்டம், கூத்தைப்பாரில் கிராம கமிட்டி சாா்பில் மாட்டு வண்டி எல்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

போட்டிகளை முன்னாள் எம்எல்ஏ சேகரன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பெரிய மாடு, பூஞ்சிட்டு, ஒற்றை மாடு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

8 மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாடு போட்டியில் 9 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 20ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 7 ஆயிரமும் வழங்கப்பட்டது.

5 மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டுப் பிரிவு போட்டியில் 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

6 மைல் தூரம் நடைபெற்ற ஒற்றை மாடு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 4 ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.