தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னையில் மோசமான வானிலை: திருச்சிக்கு திருப்பிவிடப்பட்ட மலேசிய விமானம்

News image
விமானம்- கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 179 பயணிகளுடன் ஏா் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அந்த விமானத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் காலை 8.05 மணிக்கு ஏா் ஏசியா விமானம் தரையிறங்கியது. பின்னா், சென்னையில் வானிலை சீரானதும் காலை 9.20 மணிக்கு மலேசிய விமானம் திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது. மோசமான வானிலை காரணமாக சென்னை விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.