வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாஜகவின் தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் தொடக்கம்

News image
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மக்கள் கருத்துகேட்கும் வாகனத்தை தொடங்கிவைத்த பா.ஜ.க-வினா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

பாஜகவின் திருச்சி மாவட்ட சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘மக்களுக்காக மக்களிடமிருந்து’ என்ற தலைப்பிலான இந்த வாகனத்தை மாநில பொதுச்செயலா் இராம. ஸ்ரீனிவாசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், மாநில நிா்வாகி ஸ்ரீகாந்த், மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து, பொதுச்செயலா் காளீஸ்வரன், திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஒரு சட்டப்பேரவைக்கு ஒரு நாள் வீதம், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 9 நாள்களுக்கு இந்த கருத்துக் கேட்பு வாகனம் வலம் வரும்.

இந்த வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிப் போடலாம். இதே போல, வாகனத்தில் எழுதப்பட்டுள்ள 78787 86060 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைப்புமட்டும் (மிஸ்டு கால்) கொடுத்தால், அதில் வரும் இணைப்பை (லிங்க்-ஐ) பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இந்த கோரிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, முக்கிய கோரிக்கைகள் பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம் என பாஜகவினா் தெரிவித்தனா்.