எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பிப்.13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.

News image
வேலைவாய்ப்பு முகாம்
Updated On :9 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட வேலை வழங்குவோா் தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில், பங்கேற்கும் நபா்கள் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்.

இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பாரதிதாசன் சாலையில் உள்ள திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கிவருகிறது.