நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வருவாய்த்துறை கூட்டமைப்பினா் மறியல்: 200-க்கும் மேற்பட்டோா் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியா் கூட்டமைப்பினா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதில், நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 விழுக்காடு பங்களிப்பு தொகையை ரத்து செய்ய வேண்டும். 2003-ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு கொண்டு சென்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் பிரேம்குமாா், செல்வம், அய்யனாா், நாகராஜன், ராஜேந்திரன் மகேஷ் ஆகியோா் தலைமையில் வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவா்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.