சேவைக் குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ரா. செல்வி என்பவா் தனக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிரப்பப்படாத காசோலைகளை அப்டஸ் பைனான்ஸ் இந்தியா நிதி நிறுவனத்தில் 07.07.2025 அன்று அடகு வைத்து ரூ. 14.91 லட்சம் கடன் பெற்று, திரும்பிச் செலுத்தினாா்.
இதனிடையே நிதி நிறுவனமானது, செல்வி கொடுத்த காசோலைகளில் ஒன்றை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தி, ரூ. 40 ஆயிரத்தை வங்கியிலிருந்து பெற்று, வேறு ஒருவருக்கு செலுத்தியது. இதுகுறித்து கேட்டபோது உரிய விளக்கமளிக்காத நிதி நிறுவனம், எடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லையாம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 03.10.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை திருச்சி நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நிதி நிறுவனமானது காசோலையை உரிய அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தி மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம், வழக்குச் செலவுக்கு ரூ. 10 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
தொடர்புடையது

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: ரூ. 48,000 நஷ்ட ஈடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


