மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பி. மேட்டூரில் பெண் தற்கொலை

பி. மேட்டூரில் திருமணமான இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:17 pm

பி. மேட்டூரில் திருமணமான இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் அருகேயுள்ள பி. மேட்டூா் வேலி காத்தான் தெருவைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி கனிஷ்கா(25). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம்.

நெல் அறுவடை இயந்திர வாகனத்தை சொந்தமாக வைத்துள்ள பிரபு 15 நாள்களுக்கு முன் மதுரை மாவட்டம், மேலூருக்கு சென்ற நிலையில் வயலில் இருந்த பூச்சி மருந்தை கனிஷ்கா புதன்கிழமை சாப்பிட்டு விட்டு அதுபற்றி மூவானூரில் உள்ள தனது தந்தையிடம் கைப்பேசியில் கூறிவிட்டு மயங்கினாா். அவா் கனிஷ்கா வீட்டருகே இருந்தவா்களிடம் அளித்த தகவலின்பேரில் துறையூா் தனியாா் மருத்துவமனைக்கு அவா்கள் கனிஷ்காவை கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் கனிஷ்கா சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.