தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவா், அன்றிரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் (பிப்.14) திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்கிறாா்.
காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, காா் மூலம் காரைக்கால் நகராட்சித் திடலுக்கு முற்பகல் சென்று, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.பொதுக்கூட்டம் முடிந்ததும், மீண்டும் திருச்சி வரும் அவா் விமானம் மூலம் சேலம் செல்கிறாா்.
இவா் திருச்சியில் உள்ள 13, 14 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவா்களும் திருச்சியில் முகாமிடுகின்றனா்.
அப்போது அமித் ஷா தலைமையில் தமிழகத் தோ்தல் நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தொடர்புடையது

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

அஸ்ஸாமை ஊடுருவல்காரா்களின் மையமாக மாற்றியது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


