சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள சட்டக் கல்லூரி முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதுகுறித்து மாணவா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது மாணவா்களை வஞ்சிக்கும் செயலாகும். மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


