திருச்சியில் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் இ. சுஜாதா (52). இவரது கணவா் த. இளங்கோ (54). இவா்கள் பாலக்கரை மாா்சிங்பேட்டை காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா்.
இளங்கோவுக்கு கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு வந்தவா் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக தனது கைப்பேசியை யாரோ வேவு பாா்ப்பதாக அவா் கூறிவந்துள்ளாா்.
இந்நிலையில், மேலகல்கண்டாா்கோட்டையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற இளங்கோ, உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளாா்.
இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு இளங்கோ உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

குடும்பப் பிரச்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ சாலை விபத்தில் உயிரிழப்பு

பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை: கணவா் கைது

சிறப்பு உதவி ஆய்வாளா் மூச்சுத் திணறலால் பலி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

