புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

News image
திருச்சி அந்தநல்லுரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.கட்சினா்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி-ஜி ராம் ஜி) திட்டத்தை சீா்குலைக்கும் வகையில் செல்படும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமை வகித்தாா்.

அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆா். மனோகரன் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளா் க.ஜெயம் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக மற்றும் அதன் சாா்பு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், மணிகண்டம், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், முசிறி, தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாகவும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.