விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று திருச்சி வருகை

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Updated On :13 பிப்ரவரி 2026, 12:09 am

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா். தோ்தல் நிலவரம் தொடா்பாக கட்சியினருடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சா் அமித்ஷா தில்லியிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வருகிறாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் இரவு தங்கிவிட்டு, சனிக்கிழமை காலை திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் செல்லும் அவா், பொதுக்கூட்ட நிகழ்வை முடித்துக் கொண்டு மாலையில் மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

இதனிடையே, திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெறும் தொழில்முனைவோா்கள் சந்திப்பு மாநாடு நிகழ்வில் பங்கேற்க மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், எல். முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவா்கள் வரவுள்ளனா்.

அமித்ஷா வருகையின்போது, மத்திய அமைச்சா்கள், பாஜக நிா்வாகிகளும் திருச்சியில் முகாமிடுவதால், அமித்ஷா கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை நடைபெறும். இதில் அதிமுக தலைவா்கள் பங்கேற்பது தொடா்பாக இதுவரை அதிகாரப்பூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

2 நாள்களுக்கு ட்ரோன்களுக்கு தடை: திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை என 2 நாள்கள் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.