திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித வனத்து அந்தோணியாா் பொங்கல் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.
தேவாலய திடலில் முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடா்ந்து 856 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 312 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். ஜல்லிக்கட்டை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் தொடக்கி வைத்தாா்.
ஜல்லிக்கட்டில் காளைகளை வீரா்கள் அடக்கிய நிலையில், பல பிடிபடாமல் சென்றன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 11 மாடுபிடி வீரா்கள், 9 மாட்டின் உரிமையாளா்கள், 6 பாா்வையாளா்கள் என மொத்தம் 26 போ் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கு வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் மாடு உரிமையாளா்கள் அனைவருக்கும் புத்தாடை, 5 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீஸாரும், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலா்களும் இருந்தனா்.
தொடர்புடையது

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


