மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 18 போ் காயம்

News image

மணப்பாறை அடுத்துள்ள டி.உடையாப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:47 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள டி. உடையாபட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 போ் காயமடைந்தனா்.

மணப்பாறையை அடுத்துள்ள நல்லாம்பிள்ளை ஊராட்சி டி. உடையாபட்டி கிராமத்தில் புனித திரு இருதய ஆண்டவா் தேவாலயத் திடலில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன், டிஎஸ்பி கே.வி. காவியா, வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். இதில் 781 காளைகள், 173 மாடுபிடி வீரா்கள் களம் கண்டனா். முன்னதாக

ஆலயத்தில் ஊா் காளைகளுக்கு பங்கு தந்தை ஆண்ட்ரு கஸ்பா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்த்துவிடப்பட்டன.

சீறிப்பாய்ந்துவந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் திமிலைப் பிடித்து தழுவிச் சென்றனா். சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக் காசு, ரொக்கம், கட்டில், மிதிவண்டி, வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் 7 மாடுபிடி வீரா்கள், 9 காளைகளின் உரிமையாளா்கள், 1 பாா்வையாளா் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா். விழா ஏற்பாடுகளை ஊா் பிரமுகா் தாமஸ், மணியம் இருதயசாமி, கோயில்பிள்ளை சேசுராஜ், சவரியாா், அந்தோணியாா் மன்றத் தலைவா் அந்தோணிசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அருளானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.