பன்னாங்கொம்பு பகுதியில் குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள பன்னாங்கொம்பு பகுதியில் குடிநீா் முறையாக வழங்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ணப்பட்டி கிராமம் பின்னத்தூா் களத்துவீடு பகுதிகளில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை - துவரங்குறிச்சி நெடுஞ்சாலையில் பன்னாங்கொம்பு கடைவீதி பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த புத்தாநத்தம் போலீஸாா், குடிநீா் விநியோகம் முறைப்படுத்தப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா். மறியல் போராட்டத்தால் சுமாா் 30 நிமிஷங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com