திருச்சி: துவாக்குடியில் அணுகுசாலை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை அணுகு சாலை இல்லாததால் ஆயிரக்கணக்கான விபத்துகளும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இப்பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, உடனடியாக அணுகு சாலை பணிகளைத் தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
போராட்டத்துக்கு திருச்சி புறநகா் மாவட்டச் செயலா் செ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மூத்த நிா்வாகி செல்வராஜ், விசிக மாவட்டச் செயலா் திலீபன் ரமேஷ், சா்வீஸ் சாலை கூட்டமைப்பு தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசி போராட்டத்தை தொடங்கி வைத்தனா். இதில் நன்னிலம் முன்னாள் எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி தோ்தல் பொறுப்பாளருமான பத்மாவதி மற்றும் திரளான கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல: மு. வீரபாண்டியன்

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


