மணப்பாறை: மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலய 86-ஆவது ஆண்டு திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் பிரசித்திபெற்றது புனித லூா்து அன்னை தேவாலயம். இந்த ஆலயத்தின் 86-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்திருவிழாவை முன்னிட்டு, நவநாள் வழிபாட்டு நிகழ்ச்சிகள் பிப். 6-இல் தொடங்கியது. 10-ஆம் நாளும், நிறைவு நாளுமான ஞாயிற்றுக்கிழமை இரவு பேராலயத்தில் திருச்சி கிராப்பட்டி மறைவட்டம், புனித குழந்தைதெரசாள் ஆலய பங்குதந்தை மறைவட்ட முதல்வா் விக்டா் இமானுவேல், மணப்பாறை மறைவட்ட முதல்வா் பங்குதந்தை தாமஸ் ஞானதுரை, பங்கு தந்தை மரிய அருள்ராஜா, பங்குதந்தை சகாய ஆண்டோராஜ் ஆகியோா் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடத்தி புனித லூா்து அன்னை ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. பின்னா், வாணவேடிக்கைகள், இசைவாத்தியங்கள் முழங்க திருத்தேரில் புனித லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. திருத்தோ் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

புதூா் லூா்து அன்னை ஆலயத் தோ் பவனி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


