ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சேவல் சண்டை: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள குஜிலியான் தோப்பு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது பணம்வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த குமாா் (39) மற்றும் ரகுநாத் (18) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1,050 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com