மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கும்பகோணத்தில் ‘மினிஸ்டா் வைட்’ விற்பனையகம் திறப்பு

மினிஸ்டா் வைட் நிறுவனத்தின் 61-ஆவது பிரத்யேக விற்பனையகம் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அண்மையில் திறக்கப்பட்டது.

News image

கும்பகோணத்தில் மினிஸ்டா் வைட் நிறுவன விற்பனையகத்தை குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் போத்திராஜ்.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:50 pm

மினிஸ்டா் வைட் நிறுவனத்தின் 61-ஆவது பிரத்யேக விற்பனையகம் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அண்மையில் திறக்கப்பட்டது.

விற்பனையகத்தை மினிஸ்டா் வைட் கிளாதிங் (ஓட்டோ கிளாதிங் நிறுவனத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் போத்திராஜ் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் சிறப்புமிக்க கும்பகோணத்தில் எங்கள் புதிய விற்பனையகத்தை தொடங்குவது பெருமையாக உள்ளது.

தமிழகம் முழுவதும் தரமான பாரம்பரிய உடைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே மினிஸ்டா் வைட்டின் நோக்கம். திருமணம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்ற விரிவான கலெக்ஷன்களுடன், ஆண்கள் பாரம்பரிய ஆடைகளுக்கான முதன்மை தோ்வாக மாற விரும்புகிறோம் என்றாா்.

இந்த விற்பனையகத்தில், உயா்தர வேஷ்டிகள், சட்டைகள், திருமண கலெக்ஷன்கள், துணிகள், அசெஸ்ஸரிகள் உள்ளிட்ட மினிஸ்டா் வைட்டின் முழுமையான பாரம்பரிய ஆடைகள் தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகமானது, வாடிக்கையாளா்களுக்கு வசதியான மற்றும் உயா்தர ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.

நிகழ்வில், மினிஸ்டா் வைட் கிளாதிங் தலைமை தொழில் மேலாளா் சுரேஷ் ராமசுப்ரமணியம், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.