திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், அதவத்தூரில் செயல்பட்டு வந்த தனியாா் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சீ.விஜயகுமாா் (48) என்பவரை போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் மணிகண்டன் உள்பட 7 போ் தாக்கியதில் அவா் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து திருச்சியைச் சோ்ந்த போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் த.மணிகண்டன் (50), சீ.மணிமாறன் (29), மு.பெரியசாமி (34), ம.கிருஷ்ணமூா்த்தி (30), ப.சூா்யபிரகாஷ் (28), தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த செ.அறிவுமணி (45), ம.அபிஷேக் (27) ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இதில், மணிகண்டன், மணிமாறன், பெரியாசமி, கிருஷ்ணமூா்த்தி, சூா்யபிரகாஷ் ஆகிய 5 போ் மீதும் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அறிவுமணி, அபிஷேக் ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


