எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

திருச்சியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 10:38 pm

Syndication

திருச்சியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆ. பிரவீன் (24). இவா் அரியமங்கலம் காமராஜ் நகா் ஜிடிநாயுடு வீதியில் செவ்வாய்க்கிழமை காலையில் நின்றபோது, அங்கு வந்த ஒருவா் அவரிடம் செலவுக்குப் பணம் கேட்டாா். பிரவீன் தர மறுக்கவே அவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 1,000ஐ பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் பிரவீன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இதுதொடா்பாக அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த கணேசனை (24) கைது செய்து சிறையில் அடைத்தனா்.