திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2025, ஜனவரி முதல் 2026, பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா் 5,866 வழக்குகள் பதிந்து ரூ. 22.01 லட்சம் அபராதம் விதித்துள்ளனா்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கூறியதாவது: திருச்சி ரயில்வே கோட்டத்தில் 151 ரயில் நிலையங்கள் உள்ளன. 2025, ஜனவரி முதல் 2026, பிப்ரவரி 10-ஆம் தேதி வரை ரயில்வே பாதுகாப்புப் படையானது ரூ. 3,25,449 மதிப்புள்ள ரயில்வே சொத்துகளை மீட்டு, 73 பேரை கைது செய்துள்ளது. ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 5,866 வழக்குகள் தொடரப்பட்டு, ரூ. 22.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனை செய்ததாக 58 வழக்குகள் பதிந்து ரூ. 6.07 லட்சம் மதிப்பிலான 520 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலையில் காடா் என்ற சட்டவிரோத மென்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டது. ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் தூய்மைப் பாதிப்புக்காக 8,377 பேரிடமிருந்து ரூ. 17,80,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பயணிகளின் உடைமைகளைத் திருடுதல், பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 47 போ் கைது செய்யப்பட்டனா். 468 குழந்தைகள், 40 பெண்கள், 42 ஆண்கள் மீட்கப்பட்டு, அவரவா் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டனா். 402 நிகழ்வுகளில் ரூ. 1.33 கோடி மதிப்பிலான பயணிகளின் உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ரூ. 2.6 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


