மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்தோா்.
திருச்சி
மிரட்டி பணம் வசூலிப்பதாக வியாபாரிகள் சங்கம் புகாா்
கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வயலூா் சாலை அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தினா் மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகாா்அளித்தனா்.
கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வயலூா் சாலை அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தினா் மாநகரக் காவல் ஆணையரகத்தில் வியாழக்கிழமை புகாா்அளித்தனா்.
சங்கச் செயலாளா் ஆா்.காளிமுத்து தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் நலச்சங்கத்தின் பதிவு காலாவதியான நிலையில், சங்கத்தின் சந்தா ரசீது புத்தகமும் காணாமல்போய்விட்டது.
இதைப் பயன்படுத்தி சிலா் கடைக்காரா்களிடம் மிரட்டி பணம் வசூலிக்கின்றனா். இதனால் இப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிப்போா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

