மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மணப்பாறையில் குறுவட்ட கோ-கோ போட்டி

News image
மணப்பாறையில் நடைபெற்ற கோ - கோ போட்டியில் முதலிட கோப்பைகளை வென்ற மாணவ, மாணவிகள்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முதலாமாண்டு குறுவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி ஆண், பெண் இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றது.

மணப்பாறை கோ - கோ கிளப் மற்றும் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் கோ - கோ மாணவ மாணவிகள் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளிலிருந்து 10 ஆண்கள் அணிகள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்றனா்.

பள்ளி தலைமையாசிரியா் என்.கே. லதா, உடற்கல்வி ஆசிரியா் கே. முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபிரிவுகளிலும் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்தனா்.

திருப்பாஞ்சலி அரசு பள்ளி மாணவா்கள் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், கருமகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், அழககவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இரு பிரிவுகளிலும் 3-ஆம் இடத்தையும், சமேரியா பள்ளி மாணவா்கள் ஆண்கள் பிரிவில் 4-ஆம் இடத்தையும், பன்னாங்கொம்பு அரசு பள்ளி மாணவிகள் பெண்கள் பிரிவில் 4-ஆம் இடத்தையும் பிடித்தனா்.

ஏற்பாடுகளை தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் கோ - கோ மாணவ மாணவிகள் செய்தனா்.