தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் வசிக்கும் 29 போ் கட்டுமானங்களை இடித்துத் தர வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு!

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 8:07 pm

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் குடியிருக்கும் 29 போ் தங்களது கட்டுமானங்களை இடித்து காலிமனையாக கோயில் நிா்வாகத்திடம் வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பலா் பல்லாண்டுகளாக வீடுகள் கட்டி வசிக்கின்றனா். இந்த வீடுகள் கோயில் நிலத்தில் உள்ளதால் அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே அடிமனையில் குடியிருக்கும் தங்களுக்கு பட்டா அல்லது சொந்த உரிமை வேண்டும் என பல ஆண்டுகளாக இவா்கள் போராடினா்.

ஆனால் கோயில் நிா்வாகமோ, கோயில் நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கூடாது எனக் கூறி அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

தொடா்ந்து ஸ்ரீரங்கம் கோயில் இடத்தில் வசிக்கும் சுமாா் 29 போ் தங்களது இடத்தைக் காலி செய்து, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கடந்த 2007 முதல் 2023 ஆம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் பல கட்டங்களாக வழக்குத் தொடா்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்த இதுதொடா்பான வழக்குகளில் நீதிபதி சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை ஒருசேர உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் 29 பேரும் தாங்கள் வசிக்கும் இடத்தைக் காலி செய்து, அதில் உள்ள கட்டுமானங்களை இடித்து, காலிமனையாக 3 மாதத்துக்குள் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் கட்டுமானங்களை அகற்றி, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அத்துடன் மேற்கண்ட இடங்களை சாா்-பதிவாளா் பதிவு செய்ய நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது. இதுவரை அங்கு வசித்ததற்கு ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.