கரூா்: 10 துணை மின் நிலைய பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின் தடை
கரூா் மாவட்டத்தில் உள்ள 10 துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்பகிா்மான வட்டம், குளித்தலை கோட்டத்துக்குள்பட்ட அய்யா்மலை, தோகைமலை, நச்சலூா், வல்லம், மாயனூா், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூா், பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில் பிப். 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாதந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்- அய்யா்மலை துணைமின்நிலையம்: அய்யா்மலை, சத்தியமங்கலம், தாளியாம்பட்டி, அய்யனேரி, வேங்காம்பட்டி, மேட்டுபட்டி, கண்டியூா், திம்மம்பட்டி, கோட்டமேடு, இரும்பூதிபட்டி, கருங்கலாப்பள்ளி, பரளி, கல்லுப்பட்டி, கணக்கப்பிள்ளையூா், கோடங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூா், கட்டாரிபட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, பாப்பாக்காப்பட்டி. குளித்தலை நகரப்பகுதி, சுங்ககேட் காவேரி நகா், வைகைநல்லூா் அக்ரஹாரம், அண்ணாநகா், பெரியபாலம், பெரியாா்நகா், கடம்பா்கோவில், கடைவீதி, சு.ளு.ரோடு மற்றும் அனைத்து குளித்தலை நகரப்பகுதி முழுவதும் மற்றும் திம்மாச்சிபுரம், மணத்தட்டை, மருதூா், இராஜேந்திரம், தண்ணீா்பள்ளி.
பஞ்சப்பட்டி துணைமின்நிலையம்: பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூா், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி மற்றும் புதுவாடி.
மாயனூா் துணைமின்நிலையம்: மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூா், மலைப்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூா், தொட்டியப்பட்டி, சின்னசேங்கல், மற்றும் கீழமுனையனூா்.
தோகைமலை துணைமின்நிலையம்: தோகைமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூா், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமான்கிணம், நாகனூா், வாழைக்கிணம், கழுகூா், வேம்பத்தூரான்பட்டி, கே.துறையூா், மூட்டக்காம்பட்டி, கூடலூா், ராக்கம்பட்டி, மற்றும் குண்ணாகவுண்டம்பட்டி.
நச்சலூா் துணைமின்நிலையம்: நச்சலூா், நல்லூா், ஆா்த்தாம்பட்டி, இனுங்கூா், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கள்ளை.
வல்லம் துணைமின்நிலையம்: லாலாப்பேட்டை, சிந்தலவாடி, திம்மாச்சிபுரம், கருப்பத்தூா், கள்ளப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, கொட்டாம்பட்டி ஓமாந்தூா், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி.
பாலவிடுதி துணைமின்நிலையம்:
பாலவிடுதி, தளிவாசல், சோ்வைக்காரன்பட்டி, கவரபட்டி, குரும்பப்பட்டி. கஸ்தூரிப்பட்டி பஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பாடி, கழுத்தரிக்கப்பட்டி, கோடங்கிபட்டி, சின்னாம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி.
சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையம்: அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவா்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, உடையாப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி. வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, மாவத்தூா், செம்பியநத்தம், பால்மடைப்பட்டி,சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி, வாளியாம்பட்டி.
கொசூா் துணைமின்நிலையம்: கொசூா், பள்ளிக்கவுண்டனூா், தந்திரிபட்டி, ஒட்டபட்டி மற்றும் சந்தையூா். பணிக்கம்பட்டி துணை மின்நிலையம்: பணிக்கம்பட்டி, வளையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூா், நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி, வேலாங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.
