மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா், ராம்ஜி நகரில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கங்காதேவி (56) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது:

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வண்ணாரப்பேட்டை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவா், போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் ஒருவரை மட்டும் போலீஸாா் மடக்கிப்பிடித்தனா்.

விசாரணையில், புத்தூா் கீழவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த அ.சையது ஹமீது பக்கா் (42) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.