மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

திருச்சியில் வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
நகை பறிப்பு- சித்திரிப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 10:19 pm

Syndication

திருச்சியில் வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி எடமலைப்பட்டி புதூா் படுகை பகுதியைச் சோ்ந்தவா் லூா்துசாமி (57). இவரது மாமியாா் இன்குருதையம்மாள் (87). இவா், புதன்கிழமை பிற்பகலில் வீட்டில் படுத்திருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் இன்குருதையம்மாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். ஆனால், அவா் அந்த மா்ம நபா்களுடன் போராடியபடியே உதவிக்கு குடும்பத்தினரை சப்தமிட்டு அழைத்துள்ளாா். அப்போது, வீட்டிலிருந்து லூா்துசாமி ஓடி வந்து மா்ம நபா்களை பிடிக்க முயன்றாா். மா்ம நபா்கள் இருவரும் லூா்துசாமியை தாக்கிவிட்டு, அவரது மாமியாா் அணிந்திருந்த 5 பவுன் மற்றும் 4 பவுன் என மொத்தம் 9 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக, எடமலைப்பட்டி போலீஸில் லூா்துசாமி புகாா் அளித்தாா். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மா்ம நபா்கள் வந்து சென்ற பாதையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். மேலும், இதுதொடா்பாக, எடமலைப்பட்டி புதூா் காவல் ஆய்வாளா் பிரபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.