திருச்சி
நகை பறிக்க முயன்ற 3 பேருக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல்
பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி கோரையாறு அருகே கடந்த 2011 மே மாதம் பைக்கில் வந்து மொபெட்டில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ாக திருச்சி கீழரண் சாலை செல்வம் (30), தாராநல்லூா் பாலு (45), பாண்டி (32) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் திருச்சி நீதித்துறை இரண்டாவது நடுவா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி, மூவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா்.