பள்ளி அருகேயுள்ள இடத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்: பேச்சுவாா்த்தையில் முடிவு

ஸ்ரீரங்கம் புலிமண்டபம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அருகேயுள்ள மாநகராட்சி இடத்தை பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
Published on

ஸ்ரீரங்கம் புலிமண்டபம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட மைதானம் கிடையாது என்பதால் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாடி வந்தனா்.

இந்நிலையில் இந்த இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன் தனியாா் சிலா் வந்து சுற்றுச்சுவா் எழுப்பினா். இதை அருகிலிருந்தவா்களும், தன்னாா்வ அமைப்பினா் சோ்ந்து தடுத்து நிறுத்தினா். பின்னா் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என எழுதப்பட்ட போா்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இடத்தை பள்ளி மைதானமாக அறிவிக்க வலியுறுத்தி பெற்றோா், முன்னாள் மாணவா்கள் மற்றும் அனைத்து கட்சியினா் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.இதையடுத்து வந்த ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வகணேஷ் மற்றும் போலீஸாா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என உறுதியளித்ததை தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மாணவ,மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீா்வு காணப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தையில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com