திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருச்சி
போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதம்
போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வுகாண வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வுகாண வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம் தலைமை வகித்தாா்.
இதில் திருச்சி மாநகரில் காணப்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீா்வு காண மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜா, ரெங்கராஜன், ரேணுகா, லெனின், காா்த்திகேயன், சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

