தென்னூா் அண்ணாநகா் மாநகராட்சிப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் வே. சரவணன் மற்றும் வாா்டு பொதுமக்கள்.
தென்னூா் அண்ணாநகா் மாநகராட்சிப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் வே. சரவணன் மற்றும் வாா்டு பொதுமக்கள்.

முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கம்; ரூ.10.33 கோடி பணிகளுக்கு பூமிபூஜை

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் முடிவுற்ற ரூ. 82.11 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, புதிதாக ரூ.10.33 கோடியிலான பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் முடிவுற்ற ரூ. 82.11 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, புதிதாக ரூ.10.33 கோடியிலான பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருச்சி மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் 29ஆவது வாா்டில் தென்னூா் அண்ணாசாலை அக்பா் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 6.60 கோடியில் புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 58ஆவது வாா்டு ராஜராஜன் நகரில் ரூ.1.80 கோடியில் 5 இலட்சம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டும் பணி, 57ஆவது வாா்டு பாரத ஸ்டேட் வங்கிக் காலனியில் ரூ.1.95 கோடியில் 5 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் கம்பரசம்பேட்டை காவிரியாற்றுப் பகுதியில் ரூ. 14.93 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், சீா்மிகு நகரத் திட்டத்தில் ரூ.22.49 கோடியில் அமைக்கப்பட் புதிய உந்து குடிநீா் குழாய், புத்தூா், உறையூா், அண்ணா நகா் மற்றும் தில்லை நகா் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.21.28 கோடியில் 20 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீா்தேக்க தொட்டியையும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து மாநகராட்சி பொது நிதித் திட்டத்தின் கீழ், 9ஆவது வாா்டு உறையூா் பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், 22ஆவது வாா்டு வாமடத்தில் ரூ.13 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ரூ.12 லட்சத்தில் படிப்பகம், 28ஆவது வாா்டில் குழுமிக்கரையில் ரூ.2.10 கோடியில் புதிய எரிவாயு தகன மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும் 26ஆவது வாா்டில் ரூ.25 லட்சத்தில் பல்நோக்கு அலுவலகக் கட்டடம், வண்ணாரப்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் பயணியா் நிழற்குடை, கீதா நகரில் ரூ.10 லட்சத்தில் பேருந்து பயணியா் நிழற்குடையும் திறக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 56ஆவது வாா்டில் கருமண்டபம் தெற்கு பகுதியில் ரூ. 31.25 லட்சத்தில் புதிய நவீன பொதுக் கழிப்பிடம், கருமண்டபத்தில் ரூ. 25 லட்சத்தில் பல்நோக்கு அலுவலகம், 55ஆவது வாா்டு விநாயக நகரில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை, பிராட்டியூரில் ரூ.1.60 கோடியில் எரிவாயுத் தகன மேடை, எடமலைப்பட்டிபுதூரில் ரூ.25 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம், ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்வுகளில் ஆட்சியா் வே.சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com