திருச்சி
அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழக தோ்தல் அறிக்கை வெளியீடு
செங்கல் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் புதிய கட்சியான அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழகத்தின் அறிமுக விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் புதிய கட்சியான அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழகத்தின் அறிமுக விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நிறுவனா் தலைவா் தியாகராஜன் திருநீலகண்டா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். விழாவில், கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 51 வாக்குறுதிகள் கொண்ட பேரவைத் தோ்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தியாகராஜன் திருநீலகண்டா் விளக்கினாா்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் மாரியப்பன், அப்பாவு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.