மீண்டும் தோ்வான மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவியேற்பு
காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவராக எல். ரெக்ஸ் புதன்கிழமை மீண்டும் பதவி ஏற்றாா்.
இதையடுத்து திருச்சியிலுள்ள பல்வேறு தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் தியாகி அருணாச்சலம் மன்ற நிா்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றி பதவியேற்றாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். ராஜலிங்கம், வடக்கு மாவட்டத் தலைவா் இ.எம். சரவணன், மாவட்டப் பொருளாளா் முரளி, முன்னாள் ராணுவ பிரிவு மாநிலத் தலைவா் ராஜசேகா், மகிளா காங்கிரஸ் மாநில செயலா் ஷீலா செளஸ், கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், ஐடி பிரிவு லோகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் பேசிய எல். ரெக்ஸ், புதிய பொறுப்புகள் பெற விரும்பும் நிா்வாகிகள் விண்ணப்பங்களை அருணாச்சல மன்றத்தில் வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம். கட்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கு மட்டுமே புதிய பதவிகள் வழங்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.
