கோப்புப் படம்
கோப்புப் படம்

கள்ளநோட்டு பறிமுதல் வழக்கு கும்பகோணம், புதுகையைச் சோ்ந்த மேலும் இருவா் கைது

Published on

திருச்சியில் காரில் கடத்திவரப்பட்ட கள்ளநோட்டு பறிமுதல் வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை கும்பகோணம், புதுகையைச் சோ்ந்த மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் பெட்ரோல் விற்பனையகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காருக்கு பெட்ரோல் நிரப்பிய நபா்கள் அளித்த பணம் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இங்குள்ள பணியாளா்கள் அளித்த தகவலின்பேரில், காட்டூா் மஞ்சத்திடல் சோதனைச் சாவடியில் வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீஸாா், காரில் கொண்டு சென்ற ரூ. 8.37 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், காரில் கள்ள நோட்டுகளை எடுத்துச்சென்ற மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு பாங்கி (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இவா்கள், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் பகுதிகளில் கள்ள நோட்டுகளை மாற்றிவிட்டு திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினா்.

இதன்படி, இந்த வழக்கில் தொடா்புடைய தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அலாவுதீன் (50), புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூரைச் சோ்ந்த சந்திரன் (42) ஆகிய இருவரையும் துவாக்குடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அப்போது, அவா்களிடமிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com